வைகாசி விசாகம்
Vaikasi Visakam
வைகாசி விசாகம்
சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம். அதன் காரணமாகவே முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. வைகாசி மாதத்தில் பௌர்ணமியும் விசாக நட்சத்திரமும் ஒன்றுகூடி வரும் நாள் வைகாசி விசாகமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், தங்கள் முன்வினைப்பயனால் சாபம் பெற்ற ஆறு முனிவர்கள், சிவனின் அருளால் சாபம் நீங்கி, திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு தவம் மேற்கொண்டனர். அவர்களுக்கு முருகப்பெருமான் அருள்புரிந்த நாளும் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த இனிய நாளில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தீராத பகை விலகும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும், இல்லத்தில் சுபக்காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும், உங்கள் வேலைகளில் வருமானம் பெருகும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் ஏற்படும், வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகைச் செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
முருகனின் பிறந்த நாளான வைகாசி விசாகம் நம் முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
அனைவரும் வருக!!! முருகன் அருள் பெறுக!!!
Vaikasi Visakam
Visaka Nakshatra is the incarnation star of Lord Muruga, the six-faced god who incarnated through Lord Shiva’s forehead and grew up with Kartika girls. Because of that, he is also called by the name Visakan. Vaikasi Visakam is celebrated on the day that coincides with the full moon of Vaikasi month and Visakha Nakshatra.
Vaikasi Visakam is the day Lord Muruga blessed the six sages with the grace of Lord Shiva. Puranas say that on that day, those who are suffering due to predestination worship Lord Muruga and get relief from suffering and happiness.
Benefits of Celebrating Vaikasi Visakam:
- Lord Muruga showers his grace on all his devotees actively celebrating Vaikasi Visakam.
- Removes problems and confusion in the family.
- Ensures unity among the couple and brings peace within the family.
- As an amulet, the Almighty protects his devotees against malefic effects.
- Gives offspring for couples and bestows descendants to enhance the lineage.
- Restores happiness in lives and ensures positivity among the family members.
Vaikasi Visakam will be celebrated at our temple, Please come and join us.
Event Details
Saturday May, 25
10 AM
அபிஷேகம் | அலங்காரம் | அர்ச்சனை | பக்திப் பாடல்கள்
Abishekam | Alangaram| Archanai | Bhajans
குழந்தைகள் நிகழ்ச்சி : முருகன்,வள்ளி தெய்வானை வடிவில் குழந்தைகள் உடை உடுத்தி வருதல்
Kids Event: Kids parade dressed up as Murugan, Valli, and Deivanai Costume
அங்காடிகள்
Market Place
அன்னதானம்
Lunch
Registration Info
Food Sponsors
Please sign up using the link below to sponsor food for the event.
Kids activity/ Bhajans
To participate in Kids activity and Bhajan, please register using the link below.
Get in Touch. Get Involved
If you want to volunteer, donate or help us in any way, please contact us either by phone or email.